கூகுள் தேடலில் ஆபாச தளங்களை தடுக்க

கூகுளில் தேடினால் கிடைக்காதது எதுவுமே இல்லை என அனைவரும் அறிந்ததே.  இணையத்தில் எந்த அளவிற்கு நல்ல விஷயங்கள் உள்ளனவோ அதைவிட இரு மடங்கு கெட்ட விஷயங்களும் உள்ளன. ஆகையால் கூகுளில் கெட்ட விஷயங்களை தேடினாலும் லட்சகணக்கில் ஆபாச இணையதளங்கள் வரும் இதனால் நம் பிள்ளைகளின் கவனங்கள் சிதற வாய்ப்பு உள்ளது. ஆகவே கூகுள் தேடலில் இந்த ஆபாச இணையதளங்கள் வருவதை எப்படி தடுப்பது என காண்போம்.

முதலில் இந்த லிங்கில் Google க்ளிக் செய்து கூகுள் Settings பகுதிக்கு செல்லுங்கள்.

  • உங்களுக்கு வரும் விண்டோவில் உள்ள Safe Search Filtering பகுதிக்கு செல்லவும்.
  • அங்கு உள்ள Lock Safe Search என்பதை க்ளிக் செய்யுங்கள்.
  • அதை க்ளிக் செய்தவுடன் உங்களின் ஜிமெயில் Id, Password கேட்கும் அதை கொடுத்து Sign In கொடுத்தால் உங்களுக்கு அடுத்த விண்டோ வரும் அதில் இருக்கும் Lock Safe Search என்ற பட்டனை அழுத்தவும்.
  • அங்கு அவ்வளவு தான் கூகுள் தேடலில் ஆபாச இணையதளங்கள் தடுக்கப்பட்டு விடும். 
  • நீங்கள் திரும்பவும் இந்த Safe Search Lock நீக்க நினைத்தால் அதே செட்டிங்க்ஸ் பகுதிக்கு சென்று Unlock என்பதை க்ளிக் செய்து வரும் விண்டோவில் உங்கள் USER ID, PASSWORD கொடுத்தால் திரும்பவும் இந்த லாக் நீங்கிவிடும்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 145 other subscribers